டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்கள் உள்ளடங்கலாக 69 பதக்கங்களை சீனா கைப்பற்றியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21 வெண்கலம் உள்ளடங்கலாக 73 பதக்கங்களையும், ஜப்பான் 19 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் உள்ளடங்கலாக 36 பதக்கங்களையும் பெற்று மூன்றாம்; இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, பிரிட்டன், ரஷ்யா, ஜேர்மனி, நியூஸிலாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த 10 இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா அணி இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்கலாக 4 பதக்கங்களுடன் பட்டியலில் 66ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 பதக்கங்களுடன் சீனா முன்னிலை..
படிக்க 1 நிமிடங்கள்