கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லையென அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் திட்டமிட்டபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
கொத்தலாவெல பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.