fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர்களை பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பில் தகவல்களை அறிவிக்குமாறு பொலிசார் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2021 13:12

16 வயதுக்கும் குறைவான சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது. இந்நிலையில் அவ்வாறான சிறுவர்கள் வீட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் வேறு பணியிடங்களில் 16 வயதுக்கு குறைந்தவர்களை பணிக்கு அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அறியத்தர முடியுமென ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2021 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க