fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2021 13:34

இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கை செலவீனம் குறித்த தீர்மானங்களுக்கு இணைவாக ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கும் தீர்வை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலம் குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டதையடுத்து அதனுடன் தொடர்புபட்ட கல்வித்துறை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து இவர்களது சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாதாரண நிலைமை காணப்பட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும். ஜனவரி மாதத்தில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த டலஸ் அலகப்பெரும அமைச்சரவை பத்திரம் என்ற வட்டத்திற்கு பல பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. துரதிஷ்டவசமாக நாடு பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. தற்போது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் புத்திஜீவிகளாக கருதப்படுகின்ற ஆசிரியர்கள் தமது நடவடிக்கைகள் குறித்து இரு தடவைகள் ஏனும் சிந்திக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் எவ்வித சம்பள குறைபாடுகளும் இன்றி சகல அரச ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்கினோம். வருட இறுதியில் எமது வரவு செலவு திட்டத்தில் இது குறித்தும் ஏனைய அரச ஊழியர்களி;ன் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்த தீர்மானங்களுக்கு சமமப்படுத்த தீர்மானித்தோம். குறுகிய நோக்கங்களுக்காக ஒரு சில ஆசிரியர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியதாகும். “

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2021 13:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க