முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேப்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடுத்திருந்த வழக்கின் சாட்சியை அடுத்த மாதம் 6 ம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதிவாதியான ரவி கருணாநாயக்க சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி முறைப்பாட்டுக்கென சமர்ப்பிக்கப்படவிருந்த கணணிசாட்சியை பரிசீலனைக்கு உட்படுத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றை கோரினார். குறித்த வழக்கு நாளுக்கு நாள் பிற்போடப்படுவதை தடுக்கும் நோக்கில் அனுமதி வழங்குமாறு அவர் தெரிவித்தார். கணணி சாட்சியை பரிசீலனை செய்வதற்கு தேவையான அணுகுமுறையை வழங்குமாறு அறிவித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கான திகதியையும் அறிவித்தார்.