சீனாவில் புதிய வகை கொவிட் தொற்றால் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் நான்ஞிங் நகரின் புதிய வகை கொவிட் தொற்று பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 75 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனாவின் 18 மாகாணங்கள் மற்றும் 27 முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஏனைய பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கென பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பிரான்ஸில் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு என பிரான்ஸ் அரசாங்கம் ஹெல்ப் பாஸ் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.