உலகின் வேகமாக மனிதராக இத்தாலி வீரர் சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 வினாடிகளில் நிறைவு செய்து இத்தாலியின் லெமோன்ட் மார்ஷல் ஜகொப் குறித்த சாதனையை படைத்து தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். குறித்த போட்டியில் அமெரிக்க வீரர் பிரட் கெர்லி இரண்டாவது இடத்தையும், கெனடிய வீரர் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இதேவேளை ஒலிம்பிக் புள்ளி பட்டியலில் சீனா தொடர்ந்தும் மு
ன்னிலை வகிக்கின்றது. 24 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 51 பதக்கங்களை சீனா பெற்றுள்ளது. அமெரிக்கா 20 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்கள் உள்ளடங்களாக 59 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 17 தங்க பதக்கங்களுடன் மொத்தமாக 31 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அணி இதுவரை எந்தவொரு பதக்கங்களையும் பெறவில்லை.