நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவை மத்திய மாகாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு குண்டசாலை பிரதேச செயலக பிரிவில் வீர, வீராங்கனைகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
20 விளையாட்டு சங்கங்கள் மற்றும் சுமார் 50க்கும் அதிகமான வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. குண்டசாலை பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான தடகளங்களை நிர்மாணிப்பதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.