திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் திரியாய சந்தியில் விபத்து இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு பணிக்கு செல்வதற்கு என குறித்த யுவதி, மற்றுமொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.
உயிரிழந்தவர் மயிலங்குட பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதி என தெரியவந்துள்ளது. காயமடைந்த நிலையில் மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.