பராமரிப்பு பராமரிப்புகளுக்கென மௌசாகலை நீர்த்தேக்கம் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இடைக்கிடையே திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. 2 வான்கதவுகள் இவ்வாறு இடைக்கிடையே திறக்கப்படவுள்ளது.
குறித்த சந்தரப்பங்களில் நீர்த்தேக்கத்திற்குரிய கேசல் கமுவ ஓயா மற்றும் களனி கங்கை நீர்மட்டம் அதிகரிக்க கூடும். அதுதொடர்பில் நீர்த்தேக்கத்திற்கு அருகில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.