இலங்கையின் வரி வருமானம் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டின் செயற்பாடுகள் முடங்கி இருந்தாலும், நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் விரிவடைந்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டு கடன்களின் எண்ணிக்கை கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது இம்முறை குறைந்திருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.