fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் மீண்டும் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்படலம்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2021 13:18

நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் மீண்டும் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்படலாமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

“நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்குமாயின் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான போதுமான வசதிகள் காணப்படுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் குறிப்பிடத்தக்களவு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகுமாயின் அது பிரச்சினையாக மாறலாம். எனினும் நாட்டின் தற்போதய நிலைமைகளின் படி தேவைப்படும் ஒக்சிஜன் மற்றும் ஏனைய மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இருப்பினும் தொற்றாளர்களின் வேகமாக அதிகரிக்குமாயின் அதற்கு முகம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படலாம். சுகாதார பழக்கவழக்கங்களை உரிய முறையில் பின்பற்றுவதால் நிலமை மோசமடைந்தாலும் அதனை சமாளிக்க கூடிய சூழல் எமக்கு ஏற்படலாம். நாட்டை முடக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதை தமக்கு கிடைத்துள்ள பூரண சுதந்திரமாக கொண்டு மக்கள் செயற்படுவார்களாயின் இந்த நிலைமையை எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போகும். இதனால் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தினால் மீண்டும் நாட்டை தற்காலிமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். மேல் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.”

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2021 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க