fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் அணியின் தோல்விப்பயணம் முற்றுப்பெறும் அறிகுறி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2021 12:52

இலங்கை கிரிக்கட் அணியின் தோல்விப்பயணம் முற்றுப்பெறும் அறிகுறி..

சுற்றுலா இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 20-20 தொடரை 2 க்கு ஒன்று என இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளது. இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட 20 க்கு 20 தொடர் ஒன்றின் முதலாவது வெற்றி இதுவாகும்.

நேற்றைய தினம் 3 வது 20 – 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்திய அணி ஆரம்பத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை பெற்றிருந்தது. 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி பெற்றுக்கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை 20 – 20 போட்டி ஒன்றில் இந்திய அணி பெற்றுக்கொண்ட 3 வது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். குல்திப் யாதேவ் அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய வணிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தனஞ்சய அடி சில்வா ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றியுடன் 2 க்கு 1 என தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 2008 ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றை இலங்கை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். போட்டி உட்பட தொடர் நாயகனாக வணிந்து ஹசரங்க தெரிவானர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 30, 2021 12:52

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க