fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடுப்பூசி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2021 14:55

தடுப்பூசி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளொன்றில் அதிக தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை 4 இலட்சத்து 13 ஆயிரத்து 815ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சைனோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 458 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது டோஸ் 32 ஆயிரத்து 288 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 40 ஆயிரத்து 912 பேருக்கும், மொடார்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 157 பேருக்கும் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

இதுவரை தடுப்பூசியின் முதல் டோசை எனும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87 இலட்சத்து 18 ஆயிரத்து 433ஆக உயர்வடைந்துள்ளது. இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 94 ஆயிரத்து 384 ஆக காணப்படுகிறது.
இதேவேளை சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வர்த்கர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, களுத்துறை வடக்கு ரயில் நிலைய வீதியில் வாராந்த சந்தையொன்று சுகாதார விதிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றதா என சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதன்போது அவற்றை மீறும் வகையில் வர்த்தகர்கள் செயற்பட்டமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஹட்டன் டிக்கோயாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நீதிமன்ற பதிவாளர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து நீதிமன்ற செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நெடுங்கேணி வைத்தியசாலையில் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2021 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க