கொழும்பில் இருந்து புணானை வரை கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற இராணுவத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று மனன்பிட்டிய கொலகன வாடிய பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புணானி வரை கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற இராணுவத்திற்கு சொந்தமான பஸ் கெப் ரக வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தொழிலாளர்கள் சிலர் பயணித்த கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.