நீர்ப்பாசன சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் இரு குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை நகரில் சிறு குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதற்கென 100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகிறது. கலேவெல நகரில் காணப்படும் கலஹ பகுதியிலுள்ள குளமொன்று புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன் இதற்கென 60 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் குறித்த குளங்கள் முழுமையாக மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன் இதற்கு இணையாக மேலும் பல அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.