கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ள ஆகஸ்ட் 6ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கூட்டமொன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கமைய கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆகஸ்ட் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கமைய விவாதத்திற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 3ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் நோக்கில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.