தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 82 இலட்சத்திற்கும் கூடுதலானோர் தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. 82 இலட்சத்து 32 ஆயிரத்து 194 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதுடன் 18 இலட்சத்து 86 ஆயிரத்து 930 பேருக்கு 2 வது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 602 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகள் ஏற்றும்; 2 ஆம் கட்ட நடவடிக்கை இன்று கலை முன்னெடுக்கப்பட்டது. தாண்டிக்குளம் மற்றும் பட்டாணிச்சூர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலும் தடுப்பூசி வழங்கும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம் வட்டக்கச்சி மத்திய கல்லூரி , உருத்திரபுரம் வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லுரி உள்ளிட்ட 9 நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. அத்துடன் விசேட தேவையுடையவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், படுக்கை நோயாளர்கள், முத்தியோர் இல்லத்தில் உள்ளனவர்கள் ஆகியோருக்கு அவர்களது இருப்பிடம் சென்று தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளனர். அத்துடன் 12 வாரங்களுக்கு கூடீய கர்ப்பிணி தாய்மார்கள் குறிப்பிட்ட நிலையங்களுக்கு செ ன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள பிரத்தியேக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. முல்லியவலை வித்தியானந்தா கல்லூரியில் சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை சுகாதார பிரிவினரும் இராணுவ வைத்திய பிரிவினரும் முன்னெடுத்துள்ளனர்.