கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்’தின் கீழ் ஒரு தொகுதி தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு எடுத்து வரப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு இவை எடுத்து வரப்பட்டதுடன் பத்து மணியளவில் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. சீன அரசாங்கத்தினால் ஒரே தடவையில் வழங்கிய அதி கூடிய தடுப்பூசிகளே இவ்வாறு எடுத்து வரப்பட்டன. இதற்கமைய சீனா நாட்டுக்கு வழங்கிய சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 இலட்சம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. இன்று எடுத்து வரப்பட்ட தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின் மத்திய தடு;பூசி களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு..
படிக்க 0 நிமிடங்கள்