fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடுபூராகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:00

தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடுபூராகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது..

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 74 இலட்சத்து 34 ஆயிரத்து 297 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளத. 18 இலட்சத்து 6612 பேருக்கு அதன் 2 வது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவி சீல்ட் தடுப்’பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும் அதன் 2 வது டோஸ் 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கும் வழங்ககப்பட்டுள்ளதுஃ சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 55 இலட்சத்து 65 ஆயிரத்து 424 பேருக்கும் அதன் 2 வது டோஸ் 14 இலட்சத்து 6224 பேருக்கும் வழங்கப்பட்’டுள்ளது.ஃ அத்துடன் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கும் அதன் 2 வது டோஸ் 14 ஆயிரத்து 503 பேருக்கும்ஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 967 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொர்டனா தடுபு;பூசியின் முதலாவது டோஸ் 6 இலட்சத்து 70 ஆயிரத்து 583 பேருக்கு வழங்கப்;பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடுபூராகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. தியத்த பூங்கா வளாகத்திலும் தடுப்பூசிகள் இன்று வழங்கப்படுகின்றன. எதிர்வரும் புதன் கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 4.30 இவ்விடத்தில் தடுப்பூசிகளை வழங்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள செல்ல முடியாத வயோதிபர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்க மயூரனின் வழிகாட்டலில் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் இம்மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

கொட்டகல பொது வைத்திய சுகாதார பிரிவில் உள்ள 3500 பேருக்கு கொட்டகல தமிழ் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் கே.சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.

விமானப்படையின் ஒத்துழைப்புடன் ஏராவூர் பற்று பிரதேசத்தில் இதுவரை 8180 பேருக்கு சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அரபா வித்தியாலயம் டொக்டர் பதியூதின் மஹ்முத் வித்தியாலயம் மிச் நகர் இல்மா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இன்று 2 வது நாளாக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவில் கர்ப்பிணி தாய்மாருக்கு முதல் கட்டமாக சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றும் பணி இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் காரைத்தீவு பிரதேச செயலக பிரிவில் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் தஸ்லீமா வஸீர் தலைமையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. மாவடி பள்ளி அஸ்ரப் வித்தியாலயம் , மாலிகைகாடு அல் ஹூசைன் வித்தியாலயம் போன்றனவற்றில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி-;.சுகுணனின் மேற்பார்வையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க