fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 11:35

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இது தொடர்பாக தெளிவுப்படுத்தினார்.

“2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை 2022 ஜனவரி மாதத்தில் நடைபெறவிருந்தது. நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அப்பரீட்சையை மேலும் ஒத்தி வைக்க தீர்மானித்தோம். இதற்கமைய அமைய சாதாரண தர பரீட்சையை அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியான திங்கட் கிழமை முதல் மார்ச் 3 ஆம் திகதியான வியாழக்கிழமை வரை நடாத்த தீர்மானித்தோம். “

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2021 11:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க