fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:27

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்ட மேல் மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் தாதியர் கல்லூரியில் இந்த பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சைனோபார்ம் முதல் டோஸ் வழங்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் விஹாரமகாதேவி பூங்காவிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டன. மாலை 04.30 மணிவரை இந்த வேலைத்திட்;டம் இடம்பெறவுள்ளதுடன், இதன்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்துள்ளது. 49 இலட்சத்து 19 ஆயிரத்து 323 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ்இதுவரை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 58 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸும், 5 இலட்சத்து 63 ஆயிரத்து 368 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாவட்டத்திற்கு எதிர்வரும் இரு தினங்களில் இரண்டு இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் என்.மயூரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் படுவான்கரையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமநல அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச சுகாதார அதிகாரிகள் உட்பட அரச ஊழியர்கள் பலருக்கு இதன்போது தடுப்பு மருந்து ஏற்றப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் சந்தை உள்வட்ட வீதி இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாறாக பீசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. சிகை அலங்கார நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவர் உட்பட 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்தே பீசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க