fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா கொத்தணியில் நேற்றைய தினம்1,800க்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:22

கொரோனா கொத்தணியில் நேற்றைய தினம்1,800க்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவு

நாட்டில் நேற்றைய தினம் ஆயிரத்து 815 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் இரு தடவைகள் மாத்திரமே பதிவாகினர்.

நேற்றைய தினம் ஆயிரத்து 815 கொரோனாதொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 93 ஆயிரத்து 113 ஆக உயர்வடைந்துள்ளது. அதில் இரண்டு இலட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 23 ஆயிரத்து 446 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 2 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. கடந்த 5ம் மற்றும் 6ம் திகதிகள் தவிர்ந்த இம்மாதத்தின் ஏனைய அனைத்து நாட்களும் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடக்கவில்லையென சுகாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. குறித்த காலப்பகுதியில் நாளொன்றில் அதிகப்படியாக ஆயிரத்து 883 தொற்றாளர்கள் கடந்த முதலாம் திகதி பதிவாகியிருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க