fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது தங்க பதக்கத்தை சீனா பெற்றுக்கொண்டது..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:11

ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது தங்க பதக்கத்தை சீனா பெற்றுக்கொண்டது..

2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது தங்க பதக்கத்தை சீனா பெற்றுக்கொண்டது. 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலேயே சீனாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இந்த போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற தெஹானி எகொடவெல இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற தவறினார்.

இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று மாலை 04.30க்கு இடம்பெறவுள்ள பெட்மின்டன் போட்டியில் இலங்கை சார்பில் நிலுக் கருணாரத்ன பங்கேற்கவுள்ளார். அத்துடன் பெண்களுக்கான 100 மீற்றர் பட்டர்ப்ளை நீச்சல் போட்டியின் முதற்சுற்றில் இலங்கை சார்பில் அனீகா கபூர் பங்கேற்கவுள்ளார். குறித்த போட்டி இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:11

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க