fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:09

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி..

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி நேற்றைய தினம் வெற்றியொன்றை பதிவுசெய்தது. சுற்றுலா இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தா தீர்மானித்த இந்திய அணி சிறந்த ஆரம்பத்தை வழங்கியது. முதல் 23 ஓவர்களில் மூன்று விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டிக்கு தடை ஏற்பட்டது. இதனால் 47 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் களத்திற்கு வந்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிப்பதற்கு இடமளிக்காத இலங்கை பந்துவீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர். இதற்கமைய இந்திய அணி 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில் ப்ரிதீவ் ஷா 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர். டக்வத் லூயிஸ் முறைப்படி 227 ஓட்டங்களை வெற்றியிலக்காக பெற்றுக்கொண்ட இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது. 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து இலங்கை வெற்றியிலக்கை அடைந்தது. அவிஷ்க பெர்ணான்டோ 76 ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:09

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க