fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் அறிகுறி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:05

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் அறிகுறி..

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் இன்று காலை முதல் மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நீடிக்கும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும். மேலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம். இந்நிலையில் நாட்டை சூழவுள்ள பகுதியில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2021 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க