fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் மரணப்பட்டியல் பொய்யாகும் வாய்ப்பு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 20:12

இந்தியாவில் மரணப்பட்டியல் பொய்யாகும் வாய்ப்பு..

இந்தியாவில் கொரோனா நோயாளர்கள் போன்று அங்கு இடம்பெறும் மரணங்கள் தொடர்பான தரவுகளும் பிழையானது என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதார ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையை விட அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் புதிய ஆய்வறிக்கை முடிவுகள் இன்றும் வெளியிடப்பட்டன. இவ்வறிக்கைக்கு அமைய இந்திய முழுவதும் உள்ள மக்களில் மூன்றில் 2 பங்கினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய சுகாதார ஆய்வு கவுன்ஸில் முன்னெடுத்த ஆய்வின் ஊடாக இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 21 மாநிலங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 227 பேர் இவ்வாய்வில் பங்குப்பற்றியுள்ளனர். 6 வயதிற்கு மேற்பட்டவர்களில் 100க்கு 64 வீதமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதில் குறி;பபிடப்படுகின்றது. இவ்வாய்வில் கலந்துகொண்ட மூன்றில் இரண்டு வீதமானோருக்கு உடலிலேயே அதிகளவு நோயெதிர்ப்பு சக்தி இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு வைரசினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை. ஆய்வின் முடிவுகளுக்கு அமைய வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள இந்திய மக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் ஆகும்.

எவ்வாறு எனினும் அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தரவுகளின் படி 3 கோடியே 12 இலட்சம் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 4 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த மே மாதத்தில் நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் அளவு 3 இலட்சத்து 80 ஆயிரமாக காணப்பட்ட நிலையில் தற்போது அது 40 ஆயிரம் வரை குறைவடைந்துள்ளது. இதேவேளை சுற்றுலா தளங்கள், வர்த்தக தொகுதிகள் போன்ற மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் கொரோனா வைரசின் புதிய திரிபுகள் வேகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 20:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க