மக்களுக்கான சேவையை முடக்க வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மக்கள் பிரதிநிதிகளிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தார். இதில் கருத்து வெளியிட்ட அவர் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வரி அறவிடும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என குறிப்பிட்டார். தேவையற்ற செலவுகள் விரயங்கள், ஊழல் ஆகியவற்றை குறைத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். தொழினுட்பத்துடன் தொடர்புடைய, தொழிலிலின் ஊடாக தற்போது 1.2 பில்லியன் ரூபா வரை நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது. வேறு நாடுகளில் இருந்தும் எமது நாட்டின் தொழினுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் அளவு அதிகரித்துள்ளதால் அவ்வாறான வருமான வரி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். முதலீட்டாளர்கள் அசௌகரியத்திற்குள்ளாவதை தடுக்க வேண்டும். முதலீட்டாளர்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கான சேவையை முடக்க வேண்டாம் : நிதி அமைச்சர் பசில்
படிக்க 1 நிமிடங்கள்