fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

றிஷாட்டிற்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 12:30

றிஷாட்டிற்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு

சிறுமியை வீட்டுப்பணிப்பெண்ணாக பணிக்கு அமர்த்தியமை மற்றும் அவரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு சிவில் அமைப்புகள் சில குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளன.

பௌத்த தகவல் மத்திய நிலையம், பொதுமக்கள் பொறுப்பு மத்திய நிலையம் எதிர்காலத்தில் நாங்கள் இளைஞர் அமைப்பு இலங்கை தாயின் மகள் அமைப்பு தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறு முறைப்பாடுகள் செய்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனிற்கு எதிராக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதினின் வீட்டில் சிறுமி ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பு மட்டக்களப்பு தாண்டாவெளி சந்தியில் இவ்வார்ப்பட்டத்தை முன்னெடுத்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க