fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெல் மற்றும் அரிசியின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வர்த்தகர்களிடமிருந்து நீக்கம்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 13:01

நெல் மற்றும் அரிசியின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வர்த்தகர்களிடமிருந்து நீக்கம்..

நெல் கொள்வனவு தொடர்பில் அரிசி அலை உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாதிடவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார். அதற்கமைய எதிர்காலத்தில் நெல் மற்றும் அரிசியின் விலையினை தீர்மானிக்கும் அதிகாரம் வர்த்தகர்களுக்கு கிடைக்காது என அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை கைச்சாதிடவுள்ளது. எதிர்வரும் போகத்தில் 50 முதல் 52 ரூபாய்க்கே நெல்லை கொள்வனவு செய்யவுள்ளோம். அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர். இதன்பின்னர் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. 2 ஆயிரத்து 500 ரூபாவாக இருந்த தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். ஆகவே அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தாலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையுடனும் இதுதொடர்பில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் போகத்தில் பெறப்படும் அரிசியை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது. அதன்பின்னர் அரிசி மற்றும் நெல் விலையை அரசாங்கமே தீர்மானிக்கும். தனிநபர்களால் அதனை தீர்மானிக்க முடியாது என தெளிவாக கூறிவிட்டோம்.”

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2021 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44