நாட்டில் நேற்றைய தினம் ஆயிரத்து 554 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்றைய தினம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஆயிரத்து 554 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்து 973ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 318 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 இலட்சத்து 62 ஆயிரத்து 828 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் 10 ஆயிரத்து 436 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 886 ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் வெற்றிகரமாக இடம்பெறுகிறது. ஒரு டோஸ் தடுப்பூசியாவது ஏற்றபட்டோரின் எண்ணிக்கை 58 இலட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 16 இலட்சத்து 97 ஆயிரத்து 686 ஆகும்.