உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14ஆம் திகதியும், உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையும் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
“நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை உயர்தரப்பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 22 நாட்கள் பரீட்சை நடத்தப்படும். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும். முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எனினும் விண்ணப்ப முடிவுத்திகதியை மேலும் ஒருவாரகாலத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.”