பத்தரமுல்லை இசுருபாய வளாகத்தில் ஆர்;ப்பாட்டம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிராக தேசிய ஒன்றியம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தமது சம்பள முரண்பாட்டை நீக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.
அவர்கள் கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட போது அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை மற்றும் பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.