fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் நம்பிக்கையை இழந்தது எதிர்கட்சி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2021 11:52

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் நம்பிக்கையை இழந்தது எதிர்கட்சி

அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தவறுகளின்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக இன்று பாராளுமன்றத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கட்சி சரியான முறையில் சமர்ப்பிக்க தவறியுள்ளது.

எரிபொருள் விலையை அதிகரித்தமைக்காக அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 22ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 43 பேர் கைச்சாத்திட்டிருந்தனர். 10 காரணிகளை அடிப்படையாக வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆளும்கட்சி கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடையச்செய்ய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர். இவ்வாறான பின்னணியிலேயே இன்று பாராளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமானது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2021 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க