நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 452 ஆகும். இவர்களில் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த ஐவரும் உள்ளடங்குகின்றனர். நேற்றைய தினம் அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டனர். அவ்எண்ணிக்கை 302 ஆகும். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 23 ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் குணமடைந்த 960 பேருடன் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை 3 ஆயிரத்து 733ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் 13 ஆயிரத்து 288 பீ.சி.ஆர் பரிசோதனைகளும், 4 ஆயிரத்து 35 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.