fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சேதனப்பசளை பயிர்ச்செய்கை திட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2021 12:08

சேதனப்பசளை பயிர்ச்செய்கை திட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. சேதனப்பசளை பயன்பாட்டின் மூலம் சிறந்த அறுவடை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நஞ்சற்ற நாட்டை உருவாக்கும் சேதனப்பசளை பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேட்டு நில பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சேதனப்பசளைகளை தயாரித்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நஞ்சற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் கொள்கை திட்டம் பெரிதும் வரவேற்றக்கத்தக்கது என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். சேதனப்பசளை பயன்பாட்டினால் பயிர்ச்செய்கை பூரண வெற்றியளித்துள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். சேதனப்பசளையை பயன்படுத்தி மஞ்சள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதனப்பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2021 12:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க