fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உரிய நிர்ணயவிலை இன்மையால் உள்ளுர் தங்க ஆபரண கைத்தொழிற்துறையாளர்கள் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2021 12:33

உரிய நிர்ணயவிலை இன்மையால் உள்ளுர் தங்க ஆபரண கைத்தொழிற்துறையாளர்கள் பாதிப்பு

உரிய நிர்ணயவிலை இன்மை மற்றும் பாரியளவிலான தயாரிப்பாளர்கள் காணப்படுகின்ற காரணத்தினால் உள்ளுர் தங்க ஆபரண கைத்தொழிற்துறையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண கைத்தொழிலாளர்களின் சங்கம் தெரிவிக்கிறது.

தங்க ஆபரண கைத்தொழில் துறையானது மிகவும் நுணுக்கமான கலையாகும். தங்க ஆபரணத்தினால் இலங்கை தயாரிப்பாளர்களின் கைவண்ணமானது முழு உலகிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனினும் பரம்பரை பரம்பரையாக இக் கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுவரும் சிறிய அளவிலான கைத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவிலான தங்க ஆபரண கைத்தொழிலாளர்கள் தங்க ஆபரணங்;களை இறக்குமதி செய்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அத்துடன் தங்க ஆபரண தயாரிப்;பாளர்களுக்கும் பாரம்பரிய தங்க ஆபரண கலைஞர்களுக்கும் அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்த போதிலும்; அது உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லையென்றும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொருளாதார சமூக மற்றும் அரசியல்வட்டத்திற்குள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டு வரும் இத்தங்க ஆபரண கைத்தொழில் துறையை பாதுகாக்க அரசாங்கம் முன்;வரவேண்டுமெனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2021 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44