103 மில்லியன் ரூபாவுக்கும் கூடுதலான பெறுமதியுடைய ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் அனலை தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவை கைப்பற்றப்பட்டன.
344 கிலோ கிராமும் 550 கிராம் கேரள கஞ்சாலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட டிங்கி வள்ளமொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே டிங்கி வள்ளமும் சோதனையிடப்பட்டது. 11 பொலித்தீன் உறைகளில் கேரள கஞ்சா பொதியிடப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவிக்கிறது. சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்கென காங்கேசன் துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.