உரிய திட்டமிடலின்றி நாட்டை திறந்தால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகலாம் : சுகாதார தரப்பினர் எச்சரிக்கை
Related Articles
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவினர் நாளாந்தம் பதிவாகும் நிலையில் உரிய திட்டமிடலின்றி நாட்டை திறந்தால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகலாம் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் உரிய ஏற்பாடுகளும் திட்டங்களுமின்றி நாட்டை திறந்தால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் இதேநேரம் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆகும். இதில் 27 ஆயிரத்து 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 ஆகும். நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆகும். நேற்றைய தினம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 551 ஆகும்.