டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதை அடுத்து மாவட்ட மட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பினரினதும் உதவி அத்தியாவசியமானதென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சுத்தப்படுத்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் பரவாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அத்தியாவசியமானதென சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
தற்போழுதுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டு புத்தளம் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்களில் டெங்கு பரவும் இடங்கள் இருக்கின்றதா என்பதனை கண்டறிய பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பிரதேசத்திலிருந்து இதுவரை 152 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். மாவட்ட சுகதார சேவை பணிப்பாளர், விசேட வைத்தியர் தினூஷத பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனவரி மாதத்தில் புத்தளம் மாவட்டத்தில் 41 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.