பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட மருத்துவ சங்கங்கள் 2வது நாளாகவும் வேலை நிறுத்தத்தில்..
Related Articles
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 14 இடைநிலை மருத்துவ சங்கங்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றன. இதன் காரணமாக வைத்தியசாலைகளின் அன்றான கடமைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார துறையின் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் மற்றும் இடைநிலை மருத்துவ சங்கங்கள் 14 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2 ஆம் திகதி வேலைத்தமொன்றை ஆரம்பித்தனர். இதற்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்காமையினால் இவர்கள் நேற்று காலை முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் குதிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு வந்திருந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இதேநேரம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்த வன்னியாராச்சி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றினை எட்டுவதற்கு ஒரு வார காலம் தேவையனெ சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்க்கமான முடிவு எட்டப்படும் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் வைத்திய வல்லுநர்களின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலை நிறுத்த நடவடிக்கைகள் இரண்hவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.
இதேநேரம் நிறைவுகாண வைத்திய தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை மீண்டும் கூடி எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் குதிக்க போவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்திற்கு பொருட்படுத்தாது தடுப்பூசி மற்றும் பிசிஆர் பரிசோதனகைள் எந்தவித தடையுமின்றி மேற்கொள்வதற்கு தாதியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.