தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 81 ஆயிரத்த 979 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 18 இலட்சத்து 49 ஆயிரத்து 565 பேருக்கு வழங்கப்பட்டுள்ள.
அதேவேளை இரண்டாவது டோஸ் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 572 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது டோஸ் 14 ஆயிரத்து 427 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி வேலைத்திட்டம் இன்றைய தினமும் இடம்பெற்றுவருகிறது. நாரஹென்பிட்ட சாலிக்கா மண்டபத்தில் இன்றைய தினம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகிறது. கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவை இதனை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த மாதம் தடுப்பூசி வழங்கப்பட்டோருக்கு இன்றைய தினம் அதன் இரண்டாவது டோஸ் வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர் வைத்தியசாலைக்கு அண்மித்த பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சாந்தலுக் தேவாலயத்தில் இடம்பெற்றது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இங்கு தடுப்பூசி வழங்கப்பட்டன.