ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
கொவிட் 19 ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த தடுப்பூசி சீனாவின் பீஜிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்பிலுள்ள தடுப்பூசி களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னரும் பல தடவைகள் சைனோபாம் தடுப்பூசி இங்கு கொண்டுவரப்பட்டமை விசேட அம்சமாகும்.