பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. விசேட மற்றும் கொவிட் சிகிச்சை வைத்தியசாலைகளில் இப்பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெறுவதில்லையென தாதியர் தொழிற்சங்கம் தெரிவிக்;கிறது.
தாதியர் பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பை மாற்றிமைத்தல் உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தே தாதியர் தொழிற்சங்கம் சுகயீன விடுமுறையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. தாய் சேய் மற்றும் புற்றுநோய்; உள்ளிட்ட விசேட வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை வைத்தியசாலைகளிலும் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படாத போதிலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவிக்கிறது. சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகை தந்த பெரும்பாலான நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டனர். கொவிட் தொற்றுக்கு நாடு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவது நியாயமற்ற செயல் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை டிக்யோயா ஆதார வைத்தியசாலையில் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதால் தாதியர்கள் சேவையிலிருந்து ஒதுங்கியுள்ளனர். எனினும் அவ் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்களின் சேவைகளுடன் சகல சேவைகளையும்; எவ்வித தடையுமின்றி முன்னெடுத்து செல்வதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஒரு சில வைத்தியசாலைகளின் தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.