பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 30 ம் திகதி முதல் இதுவரை அச்சட்டத்தை மீறிய 45 ஆயிரத்து 932 பேர் கைதுசெய்யப்பட்டனர். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 403 பேர் கைதுசெய்யப்பட்டனர். கண்டி, மாத்தளை, குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே கூடுதலானோர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி முதல் இதுவரையில் 45 ஆயிரத்து 935 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் பிரவேசிக்கும் 14 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதிச் சோதனைகளின் போது 6 ஆயிரத்து 541 பேர் சோதனையிடப்பட்டனர். 107 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி செயற்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்ப்ட்டனர். பயணத்தடை நீக்கப்ப்ட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அவ்வாறே அமுலில் உள்ளது.