மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி மட்டக்களப்பிலிருந்து வருகை தந்த தனியார் பஸ் வண்டியொன்று க்ரேண்ட்பாஸ் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. இதேவேளை வைபவங்கள் மற்றும் நபர்கள் ஒன்று கூடுவது தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வலியுறுத்துகின்றனர். திருமண பதிவுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று பொலிசாரால் சுற்றிவளைப்பு
படிக்க 0 நிமிடங்கள்