Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தினால் நெற்கொள்வனவு நாளை முதல்..
Related Articles
அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நாளை முதல் நெற்கொள்வனவு செய்யப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி எம்மிடம் உள்ளது. அரிசிக்கு எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாது. நெல்லுக்கு உத்தரவாத விலையொன்றை அரசாங்கம் என்ற வகையில் தெளிவான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இம்முறை விவசாயிகளிடமிருந்து நாடு ரக நெல் 50 ரூபாவுக்கும் ஒரு கிலோ சம்பா 52 ரூபாவுக்கும் ஈரலிப்பான நெல்லுக்கு 44 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும். நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல நெற்சந்தைப்படுத்தும் சபைக்குரிய நெல் ஆலைகள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். முன்னரைப்போன்று இம்முறை எவ்வித தாமதங்களும் ஏற்படாது. விவசாயிகள் நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு நெல்லை கொண்டுவந்தவுடன் பணத்தை அச்சந்தர்ப்பத்திலேயே தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.