நேற்று 1,890 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
Related Articles
நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட 1890 தொற்றாளர்களில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் கூடிய தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டதுடன் அவ் எண்ணிக்கை 337 ஆகும். களுத்துறையிலிருந்து 268 பேரும் , இரத்தினபுரியிலிருந்து 198 பேரும் கொழும்பு மாவட்டத்தியிலிருந்து 194 பேரும் காலியிலிருந்து 138 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து 121 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 55 ஆயிரத்த 508 ஆகும். 31 ஆயிரத்து 315 பேர் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 249 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.