fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டுப்பாட்டை மீறி வீதியில் நடமாடிய குசல், திக்வெல், தனுஷ்கவுக்கு எதிராக நடவடிக்கை..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2021 19:44

கட்டுப்பாட்டை மீறி வீதியில் நடமாடிய குசல், திக்வெல், தனுஷ்கவுக்கு எதிராக நடவடிக்கை..

கடந்த காலங்களில் எமது கிரிக்கெட் குழு தொடர்பில் நாம் கேள்விப்படுகின்ற ஒரே விடயம் தோல்வி என்பதாகும். தொடர்ந்து தோல்விகளை தழுவி வரும் இலங்கை கிரிக்கட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் 20 க்கு 20 தொடரில் 3 க்கு பூச்சியம் என தோல்வி கண்டது. தோல்வியில் மிதக்கும் இலங்கை கிரிக்கட் தொடர்பில் எதிர்பார்ப்பு வைத்துள்ள இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்கு இன்றைய தினம் வீரர்கள் தொடர்பான மிகவும் கவலையான செய்தியையே கேட்க முடிந்தது.

இலங்கை கிரிக்க அணியின் உப தலைவர் குசல் மென்டிஸ், விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல மற்றும் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க்க குணத்தலிக்க ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மத்தியில் அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து வெளியில் வருகின்ற விடயங்களை மையப்படுத்தி காணொளியொன்று வெளியிடப்பட்டதை அடுத்து இலங்கை கிரிக்கட் நிறுவனம் அவர்களுக்கு எதிரான தீர்மானமொன்றை முன்னெடுத்துள்ளது. அவர்கள் உயிர்வாயு குமிழிலிருந்து வெளியில் வந்த சம்பவத்தை மையப்படுத்தி அவர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கான தடை நீடிக்கப்படுமென ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கட் சபை சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய கிரிக்கட் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. இதன்போது சகல வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உயிர்வாயு குமிழுக்கு அமைய செயற்பட வேண்டும். ஒரு நாட்டிலிருந்து வெளிநாட்டு வீரர்கள் வருகை தரும் போது சுற்றுத்தொடர் நிறைவடையும் வரை இந்த உயிர்வாயு குமிழி முறையை கடைப்பிடிக்க வேண்டும். எவ்வாறெனினும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குறித்த காணொளி ஊடாக குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் டேர்ஹெம் நகரில் சுற்றித்திரிவதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் உப தலைவர் குசல் மெண்டிசின் ஒரு கையில் சிகரெட் இருப்பதும் இந்த வீடியோவின் ஊடாக தெரியவந்துள்ளது. அதேபோல் இதற்கு முன்னர் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ள்hகியுள்ள தனுஷ்க குணத்திலக்கவும் இவர்களோடு பயணிக்கின்ற விதம் இன்னுமொரு வீடியோவில் காணப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நிபுணத்துவர்கள் மற்றும் சாதாரண மக்களும் மனம் கசந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2021 19:44

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க