fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2021 13:06

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்..

யாழ் மத்திய கலாசார மையத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையில் இம்மையத்தின் ஊடாக எமது கலாசார விழுமியங்களை உலகிற்கு பரப்ப சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டில் இல்லாத நீச்சல் தடாகத்தை நவீனமயமாக்கப்பட்ட நீச்சல் தடாகமாக புனரமைத்து தருமாறு கல்லூரி சமூகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை பார்வையிடுவதற்கென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். நவீனமயமாக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்தின் கள நிலைகள் தொடர்பிலும் இயற்சை சூழலுக்கு ஏற்ப அதனை புனரமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

இதனையடுத்து, இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை-இந்திய உறவுப்பாலத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற யாழ் மத்திய கலாசார மையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்; தலைமையிலான குழுவினர் 2.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மையத்தின் நிர்மாண பணிகளையும் பார்வையிட்டனர்.

12 மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மையத்தில் 600 பேரை உள்ளடக்கும் வகையில் திரை அரங்கிலான மண்டபம், இணையத்தள ஆராய்ச்சி வசதிகள், பல நோக்கு அமைப்பிலான நூலகம், காட்சி மற்றும் கலைக்காட்சி அரும்காட்சியகம், நிறுவன அலகுகள் சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக் கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடாத்துவதற்கான கலை அரங்கமும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ் இந்திய உதவித் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், குழுக்களின் பிரதித் தலைவரும் மாவட்ட இணைத்தலைவருமான அங்கஞன் ராமநாதன் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2021 13:06

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க